Tamilசெய்திகள்

சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழக சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் வெல்லும். சட்டசபை தேர்தலில் நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க-வின் தேசிய தலைமை முடிவு செய்யும்.

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழக அரசும் வரியை ரத்து செய்ய வேண்டும்.