Tamilசெய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,240-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும், பார் வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போர் விலை குறையாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.