Tamilசெய்திகள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்- பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெற இருந்த பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78 ஆயிரம் பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜூலை 2-வது வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்கள் எடுத்து படித்தவர்கள், நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியும்.