Tamilசெய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 9,806 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதற்காக கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரெயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையத்தில் இருந்து வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9,806 பேருந்துகள் இயக்கப்படுகிறது, இன்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2,491 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசு பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்களை 044 24749002 எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல் தனியார் பேருந்துகளை கண்காணிக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் குழு அமைத்துள்ளனர். தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக 1800 425 6151 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.