Tamilசெய்திகள்

தெலுங்கானாவில் காங்கிரஸ் அளித்த 6 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – கர்நாடக அமைச்சர்கள் பேச்சு

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த தேர்தலில் கர்நாடகா பார்முலாவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது பெண்களுக்கு மாதந்தோறும் 2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது. காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் கர்நாடக மாநிலத்திலேயே நிறைவேற்றப்படவில்லை இங்கும் நிறைவேற்றமாட்டார்கள் என சந்திரசேகர ராவ் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா துணை முதல் மந்திரி சிவக்குமார் மற்றும் 10 அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் பிரசாரம் செய்யும் பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சித்தராமையா பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும். தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தனது 6 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.