Tamilவிளையாட்டு

பெண்கள் டி20 பேட்டிங் தரவரிசை – இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2 வது இடத்துக்கு முன்னேற்றம்

பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (730 ரேட்டிங் புள்ளி) முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை (743 ரேட்டிங் புள்ளி) விட மந்தனா 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். 3-வது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.

இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 7-வது இடத்திலும், ஜெமிமா 8-வது இடத்திலும் உள்ளனர். அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சக இந்திய வீராங்கனை ரேணுகா சிங் உள்ளார்.