Tamilசெய்திகள்

மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட வாகனங்கள் பழுதுபார்ப்பு – கட்டணம் இல்ல எண்கள் வெளியீடு

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மழை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் மூழ்கின. இதனால், சேதமடைந்த கார்களை மறுபடியும் இயக்க முடியாத நிலையில் அதன் உரிமையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் இதோ:

ராயல் என்பீல்ட் – 1800 2100 002
யமஹா – 1800 4201 600
டிவிஎஸ் – 1800 2587 555
ஹோண்டா – 1800 1033 434
சுஷுகி – 1800 1217 996
மாருதி சுஷுகி – 1800 1800 180
லன்சன் டொயோட்டா – 1800 1020 909, 1800 2090 909
கியா மோட்டார்ஸ் – 1800 1085 000
ஹுண்டாய் – 1800 1024 645
டாடா மோட்டார்ஸ் – 1800 209 8282
டொயோட்டா – 1800 102 50001