Tamilசெய்திகள்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது. இதற்கிடையே, 5 மாநில தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்று தேர்தல் நடைபெறும். வருகிற 30-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 6 வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம் என அறிவித்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 25 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.