த.வெ.க தலைவர் விஜய் பதவி விழா ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த டி.வி.க.,விற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விஜய் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய பலம் (118 இடங்கள்) இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை வட்டாரங்கள், தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன.
இதனால் நாளை திட்டமிட்டபடி பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
