பீகார் அமைச்சரவை நாளை விரிவாக்கம்!
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாரின் முதல்வராக பா.ஜ.கவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி முதல்வராக சமீபத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜேந்திர யாதவ், விஜய் சவுத்ரி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பீகார் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில், பா.ஜ.கவைச் சேர்ந்த 12 பேர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 11 பேர், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியைச் சேர்ந்த 2 பேர், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நிதின் நவீன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
