Tamilசினிமா

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஹிட்லர்’ படத்தின் முதல் பாடலான ‘டப்பாசு’ பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.