Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி – ஜோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

ஜோகோவிச் விம்பிள்டனில் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

கொரோனா பாதிப்பால் 2020-ம் ஆண்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.