Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – பிரேசில், மொராக்கோ இடையிலான போட்டி டிராவில் முடிந்தது

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறும் இத்தொடரில் 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் விளையாடுகின்றன.

குரூப் சி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் பிரேசில், மொராக்கோ அணிகள் மோதின.

ஆட்டத்தின் 21 வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சய்பரி ஒரு கோல் அடித்தார். இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ முன்னிலை பெற்ற நிலையில், 32 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்ததை தொடர்ந்து 1-1 என்ற கணக்கில் ஒரு அணிகளும் சமனிலை பெற்றன.

தொடர்ந்து ஆடிய இரு அணிகளும் மற்றொரு கோல் அடித்து முன்னிலை பெற கடுமையாக முயற்சித்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. முடிவில் இரு அனிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில் பிரேசில் – மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.