அதிமுக-வில் இருக்கும் இன்னும் பலர் எங்களுடன் இணைய உள்ளனர் – தங்க தமிழ்ச்செல்வன்
மதுரை ஓட்டலில் முகாமிட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து கழக துணை பொதுச்செயலாளர் இன்று எங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து துணை பொதுச்செயலாளர் உரிய முடிவை அறிவிப்பார்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தெரிவிக்கப்படும். அ.தி.மு.க.வில் உள்ள மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிறகு எங்கள் பக்கம் வருவார்கள். சிலிப்பர் செல்களும் வர வேண்டிய நேரத்துக்கு வருவார்கள்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.