பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தனர்
சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளின் முக்கிய மைல்கல்லாக, பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தை நாட்டிற்குக் அர்ப்பணிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதலமைச்சர் விஜயும் இணைந்து கொடியசைத்துத் தொடக்கி வைத்துள்ளனர்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், புறநகர்ப் பகுதிகளின் இணைப்பை மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன மெட்ரோ ரயில் வழித்தடத் திறப்பு விழா பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெருநகரத்தின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ள இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் தினசரி பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
