Tamilசெய்திகள்

ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதி – அரசிதழ் அறிவிப்பு வெளியானது

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம் 2026-ன் கீழ், ஆந்திர மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசிதழ் அறிவிப்பு (Gazette Notification) ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினையின் போது ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு பொதுவான தலைநகராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த காலக்கெடு முடிந்து அமராவதி சட்டப்பூர்வமாக தனித் தலைநகர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜூன் 2, 2024 முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும் வகையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், நீண்ட காலமாகக் நிலவி வந்த தலைநகர் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஆந்திர மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.