இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.