Tamilசெய்திகள்

மது பாட்டிலுடன் ஆட்டம்! – வீடியோவால் த.வெ.கவுக்கு அவப்பெயர்

தஞ்சை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விஜய் சரவணன் என்பவர், கையில் மதுபாட்டிலுடன் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், அதற்கு மாறாக பொதுவெளியில் மதுபாட்டிலுடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் விஜய் சரவணன் ஆடியிருப்பது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.