Tamilசெய்திகள்

செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

கரூர் மாவட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும், பிரபல ஜவுளி நிறுவன அதிபருமான எம்.சி.எஸ். சங்கர் (MCS Shankar) என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கரின் வீடு மற்றும் அவரது ஜவுளி ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலையிலிருந்தே இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்குப் பண விநியோகம் ஏதேனும் நடைபெறுகிறதா அல்லது முறைகேடான பணப்பரிவர்த்தனைகள் ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த ஆய்வால் கரூரில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.