Tamilசெய்திகள்

தமிழகத்தில் அத்தியாவாசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு – மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிப்பு

மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) தரவுகளின்படி, தேசிய அளவிலான சில்லறை பணவீக்கம் 4.82 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.92 சதவீதமாக உயர்ந்து நாட்டின் அதிக பணவீக்கம் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இதில் தமிழ்நாட்டின் கிராமப்புற பணவீக்கம் 6.10 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 5.78 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தேசிய அளவை விட தமிழகத்தில் விலைவாசி உயர்வு கணிசமாக அதிகரித்து வரும் சூழலில், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த சவாலைச் சமாளித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவருவது தற்போதைய அரசிற்கு மிக முக்கிய நிர்வாகச் சோதனையாக உருவெடுத்துள்ளது.