முடிவுக்கு வந்த இஸ்ரேல், காசா போர் – தாயகம் திரும்பும் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது. எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார். இதனையடுத்து காசாவிடம் தற்போது உயிருடன் உள்ள 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது, காசாவில் நிறுத்தப்பட்டு உள்ள இஸ்ரேல் ராணுவத்தை பின்வாங்குவது, நீண்ட காலமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பேர் மற்றும் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட 1,700 பேரை விடுவிப்பது என இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கூறியதை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
