மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது மோடி தான் – காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கே
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது மோடி தான், நாங்கள் தொகுதி மறுவரையறையை மட்டுமே எதிர்த்தோம், என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கே தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய மல்லிகர்ஜூனே கார்கே, “பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது நீங்கள் தான், நாங்கள் தொகுதி மறுவரையறை மசோதவைத்தான் எதிர்த்துப் போரடினோம். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அல்ல.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் முதலமைச்சராக விரும்புகிறாரா?. பெண்களின் உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதில் நாங்கள் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். சரோஜினி நாயுடு, இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி போன்ற பெண் தலைவர்களை காங்கிரஸ் கட்சி கொண்டிருந்தது என்பதை நினைவூட்டுகிறேன்.” என்று தெரிவித்தார்.
