மீ டூ பற்றி கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
சில தினங்களாக நடிகர், இயக்குனர் அர்ஜுன், சுசி கணேஷன், தியாகராஜன், வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்றவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். மீ டூ விவகாரம் குறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சினிமா துறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்கவே விரும்புகிறேன்.
மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன என பதிவிட்டுள்ளார்.