Tamilசெய்திகள்

பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினரும் சில தரப்பினரும் விமர்சித்து வந்த நிலையில், அதற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மறுப்பு தெரிவித்துத் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்குச் செலவிடப்பட்ட தொகையை விட, தற்போதைய பட்ஜெட்டில் சுமார் ரூ.2,176 கோடி கூடுதலாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இக்கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து நிதித்துறைச் செயலாளரும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நிதித்துறைச் செயலாளர், ஒவ்வொரு துறையிலும் முந்தைய ஆண்டின் மறுக்கப்பட்ட மதிப்பீடுகள் (Revised Estimates) மற்றும் தற்போதைய ஒதுக்கீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிதி அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரியும் என்றார்.