Tamilசெய்திகள்

கோயிலுக்குள் காலணி அணிந்து சென்றது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம்

ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திற்குள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலணி அணிந்து சென்றது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கோயிலில் நீண்ட காலமாக கோபுரச் சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் கூர்மையான ஆணிகள் விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக ஊழியர்கள் எச்சரித்ததாகவும், அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே பாதுகாப்புக்காகத் தான் காலணி அணிந்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி விமர்சிப்பவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்றும், உண்மை நிலை அறியாமல் தேவையின்றி சர்ச்சை உருவாக்குவதாகவும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.