மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது
ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நக்கீரன் கோபாலை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து கோபால் கைது செய்யப்பட்டார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதன் மூலம் பிரபலமான இவர், தமிழக அரசுக்கும் – வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.