Tamilசெய்திகள்

சீனாவில் கடல்வாழ் உயிரினங்கள் மூலம் பரவும் ‘சிஎம்என்வி’ எனும் புதிய வைரஸ் பாதிப்பு மனிதர்களிடம் கண்டுபிடிப்பு!

சீனாவில் கடல்வாழ் உயிரினங்கள் மூலம் பரவும் ‘சிஎம்என்வி’ (CMNV – Covert Mortality Nodavirus) எனும் புதிய வைரஸ் பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இறால் மற்றும் மீன்களைக் கையாள்பவர்கள் மற்றும் சமைக்கப்படாத கடல் உணவுகளை உண்பவர்களிடம் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

இந்த வைரஸ் கண்களில் தீவிர வீக்கத்தை (Uveitis) ஏற்படுத்துவதோடு, கண்ணின் உள் அழுத்தத்தை (Intraocular Pressure) வழக்கத்திற்கு மாறாக உயர்த்தி பார்வையைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இழக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.

இதற்கு எனத் தனித்துவமான தடுப்பூசிகளோ அல்லது முழுமையான மருந்துகளோ இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது கன்சைக்ளோவிர் (Ganciclovir) போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமார் 30 சதவீத நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும், ஒரு சிலருக்குப் பார்வைத்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.