Tamilசெய்திகள்

கேரளாவில் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பு! – பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது

கேரளாவின் கோழிக்கோடி மாவட்டம், ஃபெரோக்கைச் சேர்ந்த 43 வ்யதான ஒருவருக்கு, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நோயாளி புறநோயாளிகளின் பிரிவு வழியாக மருத்துவமனைக்கு வந்ததாகவும், நிபா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதற்கு முன்பு அவர் பலருடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கிடங்கை சுத்தம் செய்த போது இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அதன் சரியான மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திடம் இருந்து இறுதி உறுதிப்படுத்தல் இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.