மாநிலங்களவையில் பிரதமர் மோடி கேள்விகளுக்கு பதில் அளிக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக இந்தியா பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பதில் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. இதற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அமித் ஷாவின் பதிலை புறக்கணிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
