Tamilசெய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு! – கருப்பு சட்டை அணிந்து மக்களவைக்கு வந்த திமுக எம்.பிக்கள்

மூன்று நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் இன்று மக்களவையில் முன்மொழியப்பட உள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகிய மூன்று மசோதக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. மகளிருக்கு 280 இடங்களை ஒதுக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி தொகுதி மறுவரையரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறப்புக் கூட்டத்தொடருக்கான வியூகம் குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி விவாதித்தனர்.

இந்த நிலையில், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக எம்.பி-க்கள் மக்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து சென்றுள்ளனர். தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்தவற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.