Tamilசெய்திகள்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு. சி. ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது வருங்காலப் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பாடுபடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஏற்கனவே வாழ்த்துத் தெரிவித்திருந்த பிரதமர், தற்போது விஜய் முறைப்படி பதவியேற்றுள்ள நிலையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய – மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.