Tamilசெய்திகள்

இரண்டாவது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய்

த.வெ.க 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதால், இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள விஜய், இன்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்துத் தனது தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் திருப்பத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, விரைவில் பதவி ஏற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.