போலியான கடிதம் கொடுத்த த.வெ.க – டிடிவி தினகரன் புகார்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், மன்னார்குடி தொகுதி அமமுக எம்எல்ஏ காமராஜின் கையொப்பமிட்ட போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்து தவெக மோசடி செய்துள்ளதாக டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ள தங்கள் எம்எல்ஏவை குதிரை பேரம் மூலம் இழுக்க முயற்சிப்பதாகவும், ராவணன் சீதையை கடத்தியது போன்ற செயலில் தவெக ஈடுபடுவதாகவும் சாடிய அவர், இது தொடர்பாகக் காவல் துறையிலும் புகார் அளித்துள்ளார்.
இருப்பினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள தவெக, தாங்கள் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்ததுடன், எம்எல்ஏ காமராஜ் தனது கைப்பட ஆதரவு கடிதம் எழுதும் வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளது.
நள்ளிரவில் ஆளுநர் மாளிகைக்கு வந்து தான் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று விளக்கமளித்த எம்எல்ஏ காமராஜ், அந்தப் போலிக் கடிதம் வாட்ஸ்அப் மூலம் ஆளுநர் மாளிகைக்கு வந்ததாகத் தெரிவித்தார்.
