இன்று உலக சுதாதார தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார நாள் (World Health Day) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு இதே நாளில் உலக சுகாதார அமைப்பு (WHO) தோற்றுவிக்கப்பட்டதை நினைவுறுத்தும் வகையில், 1950 முதல் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு, உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ (Health for All) என்ற இலக்கை எட்டவும், ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்நாளில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் மனநலப் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்தத் தினம், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு நினைவூட்டலாகும்.
