7 ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்கிறார்?
த.வெ.க தலைவர் விஜய், வரும் மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ள விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதனை தொடர்ந்து 7 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, த.வெ.க எம்.எல்.ஏ-க்களை 3 நாட்களுக்கு சென்னையிலேயே இருக்குமாறு த.வெ.க தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
