Tamilசெய்திகள்

மலையேற்றத்தில் ஈடுபட்டு மாயமான கேரள பெண் 4 நாட்களுக்குப் பிறகு பத்திரமக மீட்கப்பட்டார்!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தடியண்டமோல் (Tadiandamol) மலைப்பகுதியில் மலையேற்றத்தின் போது மாயமான கேரளாவைச் சேர்ந்த 36 வயது மென்பொறியாளர் சரண்யா, அடர்ந்த காட்டில் நான்கு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தனது குழுவினரிடமிருந்து பிரிந்து வழிதவறிய அவர், எவ்வித உணவுமின்றி வெறும் 500 மி.லி குடிநீரை மட்டுமே வைத்துக்கொண்டு நான்கு நாட்கள் காட்டில் உயிர் பிழைத்துள்ளார். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதியில், இரவில் நீரோடைகளுக்கு அருகிலும் பாறைகளிலும் தங்கித் தனது தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்துள்ளார்.

ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடந்தபோது, தன்னை அடையாளம் காண ஏதுவாகத் திறந்தவெளிப் பகுதிகளில் அவர் காத்திருந்துள்ளார். இறுதியாக நேற்று (ஏப்ரல் 5) உள்ளூர் பழங்குடியின மக்கள் அவரது கூக்குரலைக் கேட்டு அவரைக் கண்டுபிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட பின் தனது தந்தையை உணர்ச்சிகரமாகக் கட்டிப்பிடித்த அவர், “காட்டில் இருந்தபோது நான் பயப்படவில்லை, மீண்டும் மலையேற்றம் செல்வேன்” என்று மிகுந்த தைரியத்துடன் தெரிவித்தார்.