குதிரை பேரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல், மற்ற கட்சிகளில் உள்ளவர்கள் தாங்களாகவே தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது எவ்வகையிலும் குதிரை பேரம் ஆகாது என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி செய்தால் மட்டுமே அது குதிரை பேரம் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தங்களின் பதவிகளைத் துறந்துவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது தனி நபர்களின் சொந்த முடிவு என்றும் கூறியுள்ளார்.
மேலும், தாங்கள் யாரையும் தவெகவிற்கு வர சொல்லி அழைக்கவில்லை என்றும், ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து தங்களின் பதவிகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துவிட்டுத் தாமாக முன்வந்து தவெகவில் இணைய விரும்புபவர்களை எப்படிச் சேர்க்காமல் மறுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
