திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீவிரவாத எதிர்ப்புப் பாதுகாப்பு ஒத்திகையை நடத்திய ஆந்திர சிறப்பு அதிரடிப்படை
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற அதிரடிப்படையான ‘ஒக்டோபஸ்’ (OCTOPUS – Organization for Counter Terrorist Operations) சிறப்புப் பிரிவினர் திருமலையில் அதிரடி தீவிரவாத எதிர்ப்புப் பாதுகாப்பு ஒத்திகையை (Anti-terror mock drill) நடத்தினர்.
கோவிலின் முக்கியப் பகுதிகள், மாட வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் திடீரென தீவிரவாதிகள் ஊடுருவினால், அவர்களை எவ்வாறு திறம்பட எதிர்கொண்டு பயணிகளையும் கோவி்ல்லையும் பாதுகாப்பது என்பது குறித்து இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
நவீன ரக ஆயுதங்களுடன் அதிநவீன உத்திகளைக் கையாண்டு நடத்தப்பட்ட இந்த ஒத்திகையானது, திருமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசரக் காலங்களில் பாதுகாப்புப் படையினரின் தயார் நிலையைச் சோதித்துப் பலப்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
