கணவருக்கு ஆதரவாக மதுரை வீதிகளில் வாக்கு சேகர்த்தி குஷ்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி, தனது தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவாக, அவரது மனைவியும் பாஜக முக்கியத் தலைவருமான குஷ்பூ சுந்தர் மதுரையில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், “மதுரை இனி என் சொந்த ஊர், இங்கேயே வீடு பார்த்துத் தங்கப் போகிறேன்” என்று வாக்காளர்களிடம் சுந்தர் சி உருக்கமாகப் பேசி வருகிறார்.
அமைச்சராகப் பணியாற்றிய சிட்டிங் எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜனை எதிர்த்துப் போட்டியிடும் சுந்தர் சி-க்கு ஆதரவாக, திரையுலகப் பிரபலத்தின் வருகை மதுரையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியூர் நபர் என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், மதுரையின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடப்போவதாக உறுதியளித்து அவர் தனது பிரசாரக் களத்தைச் சூடாக்கியுள்ளார்.
