Tamilசெய்திகள்

234 தொகுதிகளில் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், ஆண்களை விட (2,80,30,658) பெண்களின் எண்ணிக்கையே (2,93,04,905) கணிசமாக அதிகமாக உள்ளது.

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விபரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, வீடு வீடாகச் சென்று வாக்காளர் சீட்டு (Booth Slip) வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. இப்பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி வரும் 17-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்குமாறு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.