இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள் – பிரதமர் மோடி பேச்சு
குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.35 ஆயிரம் கோடி அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பேசியதாவது:
எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி மூலம் உங்களை திசை திருப்ப முயற்சிக்கும் மனிதர்களைக் காண்பீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள்.
நாட்டின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் நிபுணர்களாக மாற வேண்டும். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதில் அரசாங்கம் எவ்வளவு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதை இளைஞர்களால் காண முடிகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
