Tamilசினிமா

சூர்யா படத்தில் இணைந்த நடிகை கீர்த்தி ஷெட்டி

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் சூர்யா41 படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதை சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த கூட்டணியில் இணையவிருக்கும் கதாநாயகி குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது சூர்யா41 படத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் இதற்கு முன் உப்பென்னா, ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.