பாகிஸ்தான் அணி மல்யுத்தத்திற்கு தயாராகிறது! – முன்னாள் கிரிக்கெட் வீரர் காட்டம்
இலங்கை அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 எனக் கைப்பற்றியது.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானை 3-0 என துவம்சம் செய்தது இலங்கை அணி. சமீப காலமாக உடற்தகுதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் பாகிஸ்தான் அணியை முன்னாள் தொடக்க வீரர் அமிர் சோஹைல் கடுமையான சாடியுள்ளார்.
இதுகுறித்து அமிர் சோஹைல் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போதைய நாட்களில் உடற்தகுதி மீதுதான் கவனம் செலுத்துகிறது. நாம் கிரிக்கெட்டிற்கு வீரர்களை தயார் படுத்துவகை காட்டிலும், ஒலிம்பிக் அல்லது WWE Wrestling போட்டிக்கு அதிக அளவில் தயாராக்குகிறோம் என்பதை இது காட்டுகிறது’’ என்றார்.