Tamilசெய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டால் உதவி செய்வோம் – வட கொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு

வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வடகொரியா அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 15வது ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது தென்கொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

விரைவில் வடகொரியா அணு ஆயுதங்களையும் சோதிக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வடகொரியா தனது அணு ஆயுத பரிசோதனைகளை கைவிட்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை வளர செய்யும் வகையில் மிக துணிச்சலான திட்டம் ஒன்றை வழங்குவதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் இந்த அறிவிப்பை தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல் தெரிவித்துள்ளார்.