Tamilவிளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் – இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சிங்கப்பூரை வீழ்த்தி வெற்றி

ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி, சிங்கப்பூர் அணியும் மோதின. முதல் பாதி முடிவில் இந்திய அணி 6-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது.

இறுதியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.