Tamilசெய்திகள்

இந்திய பொருளாதார வளர்ச்சி – பா.ஜ.க வை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரம் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் 7.1 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. அத்துடன் சீனாவை விட வேகமான வளர்ச்சியை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக பா.ஜனதாவினரின் கொண்டாட்டத்தை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தது போலவே முதல் காலாண்டை விட இரண்டாவது காலாண்டில் 1 சதவீதம் குறைந்து இருக்கிறது. குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லாத போது இதில் கொண்டாட்டத்துக்கு எந்த அவசியமும் இல்லை. எதிர்பாராத அதிர்ச்சிகள் எதுவும் இல்லையென்றால் அக்டோபர்-டிசம்பர் மற்றும் ஜனவரி-மார்ச் ஆகிய காலாண்டுகளிலும் இதைப்போன்ற வளர்ச்சியே இருக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய பொருளாதாரத்தின் புதிய வழக்கமான வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருப்பதாக கூறியுள்ள ப.சிதம்பரம், அந்தவகையில் 2018-19-ம் நிதியாண்டு ஒரு வழக்கமான ஆண்டாகவே இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *