Tamilவிளையாட்டு

கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க விராட் கோலி தான் காரணம் – லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு இயக்குநர் புகழாரம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை டி20 வடிவமாக சேர்ப்பதற்கு ஐசிசி கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக் கொண்ட ஒலிம்பிக் கமிட்டி நேற்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு முன்பாக அந்த கோரிக்கையை வைத்தது. அதில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு உறுப்பினர்களின் போதிய வாக்குகள் கிடைத்துள்ளதாக தற்போது ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

குறிப்பாக பேஸ்பால், லேக்க்ராஸ், கிரிக்கெட், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய 5 விளையாட்டுகளை புதிதாக சேர்ப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில் 5 விளையாட்டுகளுக்கும் போதிய வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஒலிம்பிக்கில் இந்த 5 விளையாட்டுகளும் சேர்க்கப்படும் என்று ஒலிம்பிக் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் கிரிக்கெட்டை தெரியப்படுத்துவதற்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் பயன்படுத்தியுள்ளது. உலக அளவில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருந்தும் 25000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 75க்கும் மேற்பட்ட சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் அடையாளமாக இருப்பதால் விராட் கோலி புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை உலக அரங்கில் பாராட்டினார். விராட் கோலி தான் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கான ஒரே காரணம் என்று கூறினார்.

இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலிலுக்கு நிஜ வாழ்க்கையிலும் இணையத்திலும் வெறித்தனமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அவரது பிரபலத்தை சுட்டிக்காட்டிய காம்ப்ரியானி, “விராட் கோலிக்கு சமூக ஊடகங்களில் 340 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவரை உலகில் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரர்களில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.