Tamilவிளையாட்டு

சிஎஸ்கே – ஆர்சிபி போட்டிக்கான டிக்கெட் விற்பனை! – இணையதளம் முடங்கியதால் ரசிகர்கள் அதிருப்தி

“ஐபிஎல் 2024 சீசன்” டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு பக்கம் முடங்கியதாக ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில், மறுபக்கம் டிக்கெட்டுகள் உடனடியாக தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சா

இதற்கிடையில் Paytminsider இணைய தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்வதற்கான இடமே காண்பிக்கப்படவில்லை. 24-ந்தேதி குஜராத்- மும்பை இந்தயின்ஸ், 27-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ், மார்ச் 23-ந்தேதி பஞ்சாப்- டெல்லி போட்டிக்கான ஸ்லாட்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது.

அதேபோல் சிஎஸ்கே இணைய தளமும் முடங்கியதாக ரசிகர்கள் தெரிவித்தனர். குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.