Tamilசினிமா

‘சூது கவ்வும் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 22 ஆம் தேதி வெளியாகிறது

இயக்குநர் நலன் குமாரசாமி இக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூலி ரீதியாகவும் , வசூலி ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த பட வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார். இந்த படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.