Tamilசெய்திகள்

செப்டம்பர் 2 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்

திருவனந்தபுரத்தில் வருகிற 3-ந்தேதி 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள். மேலும் லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் அண்டை மாநிலங்களுக்கிடையே நடக்க கூடிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் அந்த கூட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடிய நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவார் என தெரிகிறது.

இதற்காக திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து 2-ந்தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அன்றைய தினம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தனியாக சந்தித்து பேசுகிறார்.

இரவு திருவனந்தபுரத்தில் தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு சென்னை திரும்புகிறார்.